கொரோனா பேரிடர் நிதியாக பொது மக்களுக்கு உதவும் வகையில், பிஎம் கேர்ஸ் நிதி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. ஆனால் பிஎம் கேர்ஸ் நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிஎம் கேர்ஸ் (PMcares Fund) நிதி குறித்து கேட்கப்பட்ட தகவல்களுக்கு பதிலளிக்க மறுத்தது பிரதமர் அலுவலகம்.

இதற்கு அலுவலகத்தின் வளங்கள் சமமற்ற முறையில் திருப்பப்படும் என்றுகூறி விளக்கம் அளித்து தகவல் மறுக்கப்பட்டது. இது மேலும் பிஎம் கேர்ஸ் நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதி செய்வதாக இருந்தன.

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் முதல் தலைமை தகவல் ஆணையராக பணிபுரிந்த ஐஏஎஸ் அதிகாரியான வஜாஹத் ஹபிபுல்லாஅளித்துள்ள தகவலில், பிஎம் கேர்ஸ் நிதி குறித்து ஆர்டிஐயில் தகவல் மறுக்கப்பட்டது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதிகளுக்கு முரணான செயல் என்றும், இதன்மூலம் அபராதம் விதிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, வழங்கும் தகவலின் வடிவத்தை மாற்றலாமே ஒழிய, முற்றிலும் மறுக்கக்கூடாது. அப்படி மறுத்தால் அபராதம் விதிக்கலாம் என்பதே நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் வெளிப்பட்டுள்ள உண்மைகளாகும்.

எனவே, அந்த வகையில் பிரதமர் அலுவலகம் சட்டப்படி தவறிழைத்துள்ளது மற்றும் அந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார். வஜாஹத் ஹபிபுல்லா சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: இந்தியாவில் பாஜகவுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் பேஸ்புக் – வலுக்கும் எதிர்ப்புகள்