வாஜ்பாய் காலத்தில் பாஜக  மத்திய மந்திரியாக இருந்தவர் ப்ரகாஷ் கோயல் ..இவரின் இளம் வயது மகன் பியுஸ் கோயல் இப்போது பாஜகாவில் நிலக்கரி ,மற்றும் ரயில்வே போன்ற முக்கிய துறைகளை வைத்துள்ளார் .
 
பொன்.ராதாகிருஷ்ணன் 30 ஆண்டுக்கு மேல பாஜகக்கு உழைத்து வரும் முக்கிய தலைவர் ..2014 தேர்தலில் தனது சுய பலத்தில் பாஜக வில் அதிமுக திமுக வை விழ்த்தி வென்ற ஒரே பாஜக பிரமுகர் அவருக்கு இணை மந்திரி பதவி தரப்பட்டுள்ளது ..இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அதேசமயம், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனால், இடைக்கால பட்ஜெட்டை யார் தாக்கல் செய்வார் என்ற கேள்வி எழுந்தது.
 
பல தமிழக பாஜக தலைவர்கள் தமிழசை உட்பட் , காங்கிரசில்  தமிழர்க்கு ப.சிதம்பரம் கிடைத்த முக்கியத்துவம் போல் பொன்.ராதாகிருஷ்ணன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று நம்பிய நிலையில்…
 
மத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் ஏற்கனவே, நிலக்கரித்துறை மற்றும் ரயில்வே துறையை கவனிக்கப்பட்டு வருவதால் கூடுதல் பொறுப்பாக நிதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் அருண் ஜேட்லி, இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் இணை  நிதியமைச்சராக பதவியில் இருந்த காலத்திலும்  மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபோதும், அவருடைய நிதித்துறை பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வழங்காமல் பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது.
 
இப்போது பட்ஜெட்டை யார் தாக்கல் செய்வார் என்ற நிலையிலும் அதே துறையில் இருந்தும் மிகவும் சீனியர் என்ற முறையிலும் முக்கியத்துவம் தராமல் தமிழ் நாட்டின் மீது உள்ள அக்கரையின்மையை காட்டுவதாக உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் அதரவாளர்கள் வருத்தமுடன் தெரிவித்தனர்..
 
மேலும் பாஜக மாநில தலைவர் தமிழிசைக்கும் இந்த வருத்தம் மோடி மீது உள்ளதாக தகவல்கள் வந்து உள்ளது ..
 
பாஜக மேலிடம் இந்த வருத்தத்தை நீக்க செய்து பொன்.ராதாகிருஷ்ணன் அவரின் அனுபவத்தை மதித்து மரியாதை செய்யுமா என தமிழக பாஜகவினர் எதிர்பார்த்து உள்ள்னர்…