கர்நாடகா, மஹாராட்ரா, மற்றும் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் மதுபானக் கடைகள் இன்று முதல் இயங்கும் என்று அந்தந்த மாநில அரசால் அறிவிக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் உள்ளிட்ட பல பகுதிகளில் சூடம் ஏற்றி குடிமகன்கள் கைதட்ட பலத்த கரவோஷம் மத்தியில் கடைகள் திறக்கப்பட்டன.

அதிகாலை முதலே கடையின் முன்னர் குடிமகன்கள் குவியத்தொடங்கினர். இதனால் நேரம் செல்லச் செல்ல., வரிசை நீண்டுகொண்டே போனதால் பல இடங்களில் போலிஸ் தடியடி நடந்த வேண்டியதாகியது.

மதுபானக் கடைகளில் கூடிய கூட்டத்தால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. எனினும், பல இடங்களில் குடிமகன்கள் இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து, சரக்குகளை வாங்கிச்சென்றனர்.

மேலும் வாசிக்க: ஏழை மாணவர்களுக்கும் கல்வி சாத்தியம்- ஜெகன் மோகன் ரெட்டியின் அசத்தும் அறிவிப்புகள்

சில கடைகளில் 2 மணி நேரத்தில் அனைத்து சரக்குகளும் விற்றுத்தீர்ந்தன. போதிய அளவு இருப்பு இல்லாததால் கடைகளும் மூடப்பட்டன.

அதிகாலை முதலே கடையின் முன்னர் குடிமகன்கள் குவியத்தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல,. வரிசை நீண்டுகொண்டே போனது.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=xRtq0Pn9YRI” title=”Unprecedented Crowd in Bangalore Liquor Shops “]