டெல்லியில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் திட்டத்திற்கான தடையை நீக்கி, கட்டுமானப் பணிகளைத் தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில், புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டுவது அடங்கிய மத்திய விஸ்டா திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. கடந்த, 2019 செப்டம்பர் மாதம் இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது. மொத்தம், 1,200 எம்பி.க்கள் அமரும் வகையில், நவீன வசதிகள் உடைய, புதிய நாடாளுமன்றம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில், முக்கோண வடிவில், இந்த புதிய பார்லிமென்ட் அமைய உள்ளது. மொத்தம், 971 கோடி ரூபாய் செலவில், வரும், 2024ல், நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது செயல்படும் வகையில், இது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கான நிலம் வகைப்பாடு மாற்றப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி கொடுத்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனையடுத்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடை விதித்து டிசம்பர் 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே நேரத்தில், ஏற்கனவே திட்டமிட்டபடி, அடிக்கல் நாட்டு விழா நடத்த அனுமதி வழங்கியது. இதன்படி, புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, டிசம்பர் 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சஞ்சிவ் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், 2 : 1 என்ற அடிப்படையில், மத்திய விஸ்டா திட்டத்தை செயல்படுத்த, பெரும்பான்மை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், “இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ள நிறுவனங்கள், காற்று மாசு ஏற்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திட்டத்தை துவங்குவதற்கு முன், பாரம்பரிய கட்டங்கள் பராமரிப்பு குழு உட்பட அனைத்து துறைகளின் ஒப்புதலை பெற வேண்டும்.
நில வகைப்பாடு மாற்றப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதில் எந்தத் தவறும் நடந்ததாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. அதனால், திட்டத்தை செயல்படுத்த இருந்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கண்ணா, திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளித்து உள்ளார். ஆனால், நில வகைப்பாடு மாற்றியது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை ஏற்க முடியாது எனத தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் வழக்கில் கைதாகிய அதிமுக நிர்வாகி மற்றும் அதிமுக அமைச்சரை சுற்றி சுழலும் சர்ச்சை