பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் சாரதா நகரில் வசித்து வருகிறார். இவரது வீடு அருகே உள்ள மளிகைக் கடையில் பொருள்கள் வாங்குவது வழக்கம். நேற்று இரவு அந்த மளிகைக் கடையில் தோசைமாவு பாக்கெட் வாங்கிச் சென்றுள்ளார்.
அப்போது அந்த கடையின் பெண்மனி ” நேற்று மாவு புளிப்பாக தான் இருக்கும் என் சொல்லி கொடுத்து உள்ளார்.
வீட்டில் சென்று தோசை சுட்டு சாப்பிட்டபோது மிகவும் புளிப்புச் சுவையுடன் இருந்துள்ளது . பினன்ர் அந்த மாவு பாக்கெட்டை அப்படியே எடுத்துக்கொண்டு மளிகைக் கடைக்குச் சென்றார்.
கடையில் இருந்த கீதாவிடம் மாவு கெட்டுப்போனது குறித்துக் கேட்டு அந்த மாவு விற்ற பெண்ணை கெட்ட வார்தையில் திட்டி அடிக்க பாய்ந்துள்ளார் .
அப்போது அந்தப் பகுதியில் நின்ற கீதாவின் கணவர் செல்வம் கோபத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை தடுத்து தன் மனைவியை தாக்கிய நபரை திரும்பி தாக்க மேலும் தடித்த வார்த்தையை அப்பெண்ணின் மீது பேசியபடியே வீட்டுக்கு சென்று விட்டார்
இதை , செல்வம் விடாமல் ஜெயமோகன் வீட்டுக்குச் சென்று பிரபல இயக்குனர் மணிரத்னம் படத்துக்கு தொடர்ந்து எழுதும் பிரபல எழுத்தாளர் பயன் படுத்திய அதே கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார்.
அப்போதுதான் ஜெயமோகனின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு தாக்குதல் நடந்த சம்பவம் தெரியவந்தது.
இதையடுத்து, அவரின் பவர்புல் வட்டத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட., நன்றாக உள்ள ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சென்று அனுமதியாகி விட்டார் .
இதை தொடர்ந்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாஜக அணியுடன் கைகோர்துள்ள அதிமுக அரசு புகாரை பெற்று கொண்டு மிக விரைவாக நேற்று இரவே கடைக்காரர் செல்வமும் கைது செய்யப்பட்டார்.
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கொடுத்த புகாரின்பேரில் மளிகைக்கடைக்காரர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,
மிக மோசமாக கெட்ட வார்தைகளால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனால் இழிவு படுத்தப்பட்ட செல்வத்தின் மனைவி கீதா ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளார்.
இதுபற்றி கீதா சொன்னவை , “எங்கள் மளிகைக் கடை பக்கத்திலேயே ஆவின் பாலகம் மற்றும் தோசை மாவு விற்பனை செய்துவருகிறோம். நேற்று அந்த கடையில் இருந்து எடுத்து மளிகைக் கடையில் மாவை வைத்திருந்தேன். ஜெயமோகனை யார் என்றே எனக்கு தெரியாது. அவர் என்னிடம் மாவு பாக்கெட் கேட்டார். 13-ம் தேதி உள்ள மாவு பாக்கெட்தான் இருக்கிறது என்றேன். 14-ம் தேதியிட்ட பாக்கெட் இல்லை என்றேன். தெரிந்துதான் வாங்கி சென்றார். வாங்கிச்சென்ற அரை மணி நேரத்தில் கோபமாக வந்து என் தலைமுடியை பிடித்தார். அதனால்தான் அங்கு நின்றிருந்த எனது கணவர் செல்வம் அவரை தாக்கினார். என்னிடம் போலீஸ் வாக்குமூலம் வாங்கியது, ஆனால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
செல்வம் தி.மு.க-வின் 17-வது வட்டத்தில் தொண்டராக உள்ளார். இதனால் செல்வத்துக்கு ஆதரவாக நாகர்கோவில் நகர தி.மு.க செயலாளர் மகேஷ் நேசமணி நகர் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் எழுத்தாளர் ஜெயமோகனிடம் சென்றும் பேசியுள்ளார். ஆனால் அதற்கு அவர் “மாவு கடைக்கு எல்லாம் அதரவா நீ எல்லாம் பேச வரலாமா” நான் சொன்னால் IAS உயரதிகாரிகளே கேப்பார்கள் நீ என்ன சுண்டக்காய் பிரதிநிதி என ஜெயமோகன் மிரட்டியதை தொடர்ந்து மகேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து தி.மு.க நகரச் செயலாளர் மகேஷ் சொன்னவை “செல்வம் தி.மு.க.காரர் என்றில்லை எனக்கு தெரிந்தவர் . ஆனால், ஜெயமோகன் எனத் தெரிய வந்ததும் உடடியாக நான் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டேன்” என்றார் . பிரபல எழுத்தாளர் என்பதால் அடுத்தது என்ன செய்ய வேண்டும் எனற குழப்பம் அவரின் முகத்தில் ஒடியது ..
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, “செல்வம் நேற்று குடிபோதையில் இருந்துள்ளார். அந்தச் சமயத்தில்தான் எழுத்தாளர் மீது தாக்குதல் நடத்தினார். செல்வம் தனது வாக்குமூலத்தில், `ஜெயமோகனை நான் சார் என்றுதான் அழைப்பேன். அவரின் மனைவியை அம்மா என அழைப்பேன். மாவு பாக்கெட்டை என் மனைவி மீது வீசுவதற்காகச் சென்றதால் நான் தாக்கினேன்’ என கூறிக்கொண்டே இருந்தார். என்றனர்
தாக்கப்பட்ட கீதா தரப்பு புகாரை பெற்று கொள்ள மறுத்த காவல் நிலையம் , ஆனால் செல்வம் மீது மட்டும் கொலை மிரட்டல் விடுத்தல், தாக்குதல், கெட்டவார்த்தையால் திட்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளது எனவும் , மேலும் பெண் தாக்கப்பட்டாலும் புகார் இல்லையா எனவும் கீதா கண்ணிருடன் தெரிவித்தார்
இதை தொடர்ந்து வலை பக்கத்தில் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை கண்டித்து வருகினறனர் என்பதும் குறிப்பிடதக்கது
திராவிடத்தை மிக திவிரமாக தனது கூரிய எழுத்து முலம் தாக்கும் வலதுசாரி அர்எஸ்எஸ்சிந்தனைவாதி பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் .,
ஏற்கனவே மறைந்த மரியாதைக்கு உரிய பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி அவர்களை குலத்தால் வேசி என்றும் .,
ஆனால் அவரை இரண்டாம்தரமாக கலயாணம் செய்தவர் தனது சாதி என்பதால் தான் பாடகி புனிதத்தன்மை அடைந்தார் என கூறி சமூகவலை தளத்தில் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடதக்கது..