பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு அக்டோபர் 15க்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாநிலஅரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

எனினும் கொரோனா அச்சம் காரணாக பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், நிபந்தனைகள் ஆகியவற்றை பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி அறிவித்து உள்ளது. அதில்,

கல்லூரிகளில் 50% மாணவர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளில் குறைந்த மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும்.

மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம் என்பதால் விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கல்லூரிகள் திறக்கப்பட்டதும் வரும் விடுதி மாணவர்கள், 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படவேண்டும்.

விடுதி ஒவ்வொரு அறையிலும் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும் என்று யுஜிசி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு அறிவிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்