கடந்த சில வருடங்களாக இந்தியாவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
5 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரும் பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகின்றனர்.
கடந்த 25ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் கடைபிடிக்கப்பட்டது. அப்போது ஐ.நா. சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல், இந்தியாவில் வரதட்சணை கொடுமை காரணமாக நிகழும் கொலைகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்றும்.,
உலகம் முழுவதும் கடந்தாண்டு 87 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 50 ஆயிரம் பேர் கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 6 பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர் என்றும்.,
ஏனைய நாடுகளை விடவும் இது அதிகமாக., கடந்த 2016ம் ஆண்டு, இந்தியாவில், பெண்கள் கொல்லப்பட்ட சதவீதம் 2.8 சதவீதமாக இருந்ததுள்ளது என்றும்.,
இந்தியாவில் 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களில், 33.5 சதவீதம் பேர் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது உடல்ரீதியான பாலியல் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்றும்.,
இது, கடந்தாண்டு 18.9 சதவீதமாக இருந்தது ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் இது 15% அதிகரித்து உள்ளது என்றும்.,
அதுமட்டுமில்லை, வரதட்சணையால் ஏற்படும் இறப்புகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் உலகிலேயே பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடுதான் என்ற யாரும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகரமான தகவலும், இதன்மூலம் வெளிவந்துள்ளது.
உலகளவில் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையானது ஒரு லட்சம் பெண்களுக்கு 1.3 சதவீதமாக உள்ளது.