பாமகவின் கல்லெறி போராட்டம் காரணமாக, சென்னை பீச்- தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி பாமக இன்றுமுதல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அமைதி போராட்டம் என்று அறிவித்த நிலையில், பாமகவினர், சாலை மறியல், வாகன மறியல், சாலை தடுப்புகளை அடித்து நொறுக்கி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
சென்னையில் பல இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட பாமகவினர், மின்சார ரயில்கள் மீது கல்வீசும் நடத்தினர். கொரோனா அச்சுறுத்தல் காலமாக வாழ்வாதாரம் இழந்துள்ள அப்பாவி பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாகத் தான், மின்சார ரயில் சேவை வழங்கப்பட்டு வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ரயில்கள் மீது கற்களை வீசிய பாமகவினரின் போராட்டத்தால் சென்னை தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
[su_image_carousel source=”media: 19470,19471″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]
பாமகவினர் போராட்டத்தால் ஏற்கனவே சென்னையின் முக்கிய சாலைகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே பாமக இளைஞரணி தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்- ரஜினி