பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ, மாணவிகள்‌ வரும்‌ செப்டம்பர்‌ 1 முதல்‌ பள்ளி அடையாள அட்டை, சீருடையுடன்‌ அரசுப் பேருந்துகளில்‌ கட்டணமின்றிப் பயணம்‌ செய்யலாம்‌ என்று போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள்‌ வரை பள்ளி, கல்லூரிகள்‌ திறக்கப்படாத நிலையில்‌, தமிழக அரசு அறிவித்துள்ள அரசு வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌ அடிப்படையில்‌, பள்ளி மற்றும்‌ அரசுக் கல்லூரிகள் வரும்‌ 01.09.2021 முதல்‌ திறக்கப்பட உள்ளன.

எனவே 2021-22 கல்வியாண்டில்‌ மாணவர்‌, மாணவியர்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக்‌ கழகங்களால்‌ வழங்கப்படும்‌ வரை அரசுப் பேருந்துகளில்‌ பள்ளி மாணவ மாணவியர் சீருடை அல்லது

பள்ளிகளில்‌ வழங்கப்பட்ட புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம்‌ காண்பித்து தத்தம்‌ இருப்பிடத்தில் இருந்து பயிலும்‌ பள்ளி வரை சென்றுவர, கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌.

அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ தங்களது கல்வி நிறுவனத்தால்‌ வழங்கிய புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம்‌ காண்பித்து கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌” என்று அமைச்சர்‌ ராஜகண்ணப்பன்‌ தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, ஊர்வலம் நடத்தத் தடை: தமிழ்நாடு அரசு