அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 15 நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
 
வேட்புமனுதாக்கல் செய்ய இன்னும் 6 நாட்களே உள்ளன. அதிலும் வரும் 23 மற்றும் 24ந்தேதி விடுமுறை நாளாக உள்ளது. மீதியுள்ளது நான்கு நாட்களே.
 
ஆனாலும் இன்னும் மீதியுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை. அதில் திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், திருவண்ணாமலை போன்ற தொகுதிகளும் அடக்கம்.
 
அறிவிக்க படாத நிலைக்கு காரணம் திருவண்ணாமலை தொகுதியில் முதலியார் சமுதாயத்தை சேர்ந்த மா.செவுமான பஞ்சாட்சாரம் பின் வாங்கியேதயாகும்
 
தேர்தல் செலவுக்குன்னு பணம் எதுவும் தரமாட்டாறாம்,வேட்பாளராக நிற்பவர்கள் தான் பார்த்துக்கனுமாம், ஜெயிக்கறமாதிரியிருந்தா செலவு செய்யலாம், பூத்ல உட்காரவைக்கவே ஆள் இல்லாம இருக்கோம், இதுல எங்க செலவு செய்து நிக்கறதுன்னு, சீட்டே வேணாம்னு கட்சி நிர்வாகிகள் தலை தெறிக்க ஓடறாங்க, அதனால் தான் மீதி தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவிக்கறது தாமதமாகிறது என்றார்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள்
 
தொகுதியில் பெரும்பலமாக வன்னியர் வாக்கு உள்ளதால் தெற்கு மா.செ தர்மலிங்கத்திடம் தினகரன் கூற தன்னிடம் பணமில்லை என அவரும் தயங்கிவிட்டார்.
 
வேலூர் தொகுதியில் யாராவது ஒருவராது  நில்லுங்க எனறு கொஞ்சும் நிலைக்கு தினகரன் இறங்கி வந்தும் முன்னால் எம்.எல்.ஏக்களான ஞானசேகரன், கலையரசன், முன்னால் மா.செ க்களான சிவசங்கரன், வாசு போன்றவர்கள் பணமில்ல, நீங்க தர்றதாயிருந்தா நிற்கிறேன், இல்லைன்னா இல்லை என ஒவ்வொருவரும் கறாராக சொல்லிவிட நொந்து போன தினகரன் முன்னால் அமைச்சர் பாண்டுரங்கனிடம் கொஞ்சி பேசி அவரை நிற்க வைக்கும் முயற்ச்சியில் உள்ளராம்.
 
அரக்கோணம் தொகுதியில், முன்னால் எம்.பி கோபாலை நிற்கச்சொன்னார் தினகரன். அவர் முடியாது என்றதால் அவரது மகனும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ பார்த்திபனிடம், நீங்க நில்லுங்க, நீங்க சொல்ற ஆளுக்கு எம்.எல்.ஏ சீட் தந்துடலாம என தூண்டிலை போட அவரும் எந்த பக்கம் போகலாம் என்ற குழப்பத்தில் உள்ளாராம் .
 
இதேப்போல் ஆரணி தொகுதியில் சிலரை கேட்க அவர்கள் எங்களால் முடியாது என ஓடிவிட்டார்கள். சமீபத்தில்தான் முன்னாள் அமைச்சர் தாமோதரன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த குள.சண்முகநாதன் ஆகியோர் அ.தி.மு.க-வுக்குத் தாவினர். தற்போது வி.பி.கலைராஜனும்  நீக்கப்பட்டுள்ளார்.

 
யார் வந்தாலும் சென்றாலும் இயக்கம் நிற்கும் என்று டி.டி.வி.தினகரன் பலமுறை கூறியுள்ளார்.
 
ஆனால் இப்படி வேகமா போகிற போக்கைப் பார்த்தால், இயக்கத்தை நடத்த நிர்வாகிகள் வேணும் தானே.. மறுக்க முடியுமா என்கிறார்கள் அக்கட்சியின் தொண்டர்கள்  
 
செந்தில் பாலாஜியை தொடர்ந்து  இன்று அவரின் சென்னையின் தெற்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன்  திமுகவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டது இடியாக தினகரன் காதுக்கு விழுந்து உள்ளது என்கிறாரகள் அவருடன் உள்ளவர்கள் ..