டிராபிக் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கும் வகையில் சீனாவை சேர்ந்த ஜாவோ டெலி (40) என்பவர் பறக்கும் பைக்கை கண்டுபிடித்து வடிவமைத்துள்ளார்.
இதன் சோதனையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. மேலும் வர்த்தக பயன்பாட்டிற்கும் தயாராகிவிட்டது. எடை குறைந்த சட்டத்தின் நடுவே டிரோன் ப்ரொபெல்லர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. விமான இருக்கைக்கு கீழ் மோட்டார் நிறுவப்பட்டுள்ளது.
மேலே எழுந்து பறக்க விமான டிரோன் சக்தி கொடுக்கின்றது. இதை கண்டுபிடிக்க காரணம், ஜாவோ டெலி அலுவலகம் செல்லும்போது வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துள்ளார். இதன் எதிரொலியாக இதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.
இந்த பறக்கும் மோட்டாரை கண்டுபிடிக்க 1559 முறை முயன்று தோல்வியை தழுவியபோதும் விடாமுயற்சியால் இறுதியில் வெற்றியடைந்துள்ளார். காற்றை கிளித்துக் கொண்டு ஜாவோவின் மோட்டார் பைக் பறக்கின்றது. இது 1560வது முயற்சிக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இந்த வாகனத்தில் ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்க முடியும். இந்த சீனாவின் கண்டுபிடிப்புக்கு சூப்பர் ஹீரோ, குரங்கு சிங், பறக்கும்-டிரோன் ஜின் டூயூன் அல்லது மாஜிகல் கிளவுட் என்று பெயரிட்டிருக்கின்றனர்.
100 கிலோ வரை சுமக்கும் தன்மை கொண்ட இந்த பைக் 256 கிலோ எடை கொண்டது. மேலும் அதன் பேட்டரி அரை மணி நேரம் தாங்கும் தன்மை கொண்டுள்ளது.
ஜாவோ தெற்கு சீனாவில் ஹூனான் மாகாணத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். மற்ற சிறுவர்களை போல தானும் வானில் பறக்க வேண்டும் என்று கனவும் கண்டார். தற்போது இது நிறைவேறியுள்ளது.