சித்த மருத்துவர் தணிகாச்சலம் மீது தமிழக அரசு போட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை தமிழக அரசு புறக்கணிப்பவதாகவும் கூறி சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு எதிராக தணிகாச்சலம் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார்.

இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தணிகாச்சலத்தை கடந்த மே மாதம் 6 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் மக்களிடம் கொரோனா சிகிச்சை செய்வதாக கூறி பணம் பறித்ததாக அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து தனது மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தணிகாச்சலம் தந்தை கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

அதில் இந்தியாவில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்காதது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மற்ற மருத்துவ முறைகளை போன்று இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்கவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் கொரோனாவிற்கு சித்த மருந்து தன்னிடம் இருக்கிறது என்று சொன்னாதாலேயே சித்தா மருத்துவர் திரு தணிக்காசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா., சித்த மருத்துவர்களை அரசு சந்தேக பார்வையுடன் பார்ப்பது ஏன் என்று வேதனை தெரிவித்ததுடன்,

அனைத்து மருத்துவமனைகளிலும் அலோபதி என்ற பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது. ஆனால், சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினாலே சந்தேகத்துடன் பார்ப்பது வேதனை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட சித்த மருத்துவர் தணிகாசலத்தின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

90% கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி ரெடி; ஆய்வில் வெற்றி