பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அதற்கான சலுகை குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக பத்திரிகை, ஊடகப் பணியாளர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பங்களுக்கு செய்தி, மக்கள் தொடர்புத் துறை மூலமாக நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “பத்திரிகை, ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 4 ஆம் தேதி அறிவித்தார். இதன்படி, பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றி வரும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்,
புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு பணியாளர்கள், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர் அட்டை அல்லது பிரஸ் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.
மத்திய அரசின் ஆணைப்படி பத்திரிகை, ஊடகப் பணியாளர்கள் மத்திய அரசின் முன்களப் பணியாளர் பட்டியலில் இல்லாவிட்டாலும், 18 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும்போது முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும்.
கொரோனா தொற்றின் காரணமாக பத்திரிகை, ஊடகப் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பங்களுக்கு செய்தி, மக்கள் தொடர்புத் துறை மூலமாக நிவாரணம் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள்; அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்