பிரதமர் மோடி கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து கள்ள பணத்தை மற்றும் கறுப்பு பணத்தை ஒழிப்பேன் என்றால் .. ஆனால் அது படு தோல்வியில் முடிந்தது என்பதை நாம் அறிவரும் அறிந்ததே ..
பின்னர் மீண்டும் ‘சொத்து புத்தகம்’ திட்டத்தை அமல்படுத்த தீவிரமாக முயன்றார். பினாமி பெயர்களில் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளை கண்டுபிடிப்பதற்காக இத்திட்டம் வகுக்கப்பட்டது.
இதன்படி, மக்கள் தங்கள் பெயரில் உள்ள சொத்து விவரங்களை தாமாகவே முன்வந்து, அரசிடம் தெரிவித்து அதற்கான பட்டியல் அடங்கிய புத்தகத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் இது, ஆதாருடன் இணைக்கப்படும்.
இதன் மூலம், ஒருவருக்கு எத்தனை சொத்துகள் இருக்கின்றன என்ற கணக்கு, அரசிடம் தௌிவாக இடம் பெறும்.
இவ்வாறு கணக்கு காட்டப்படாத சொத்துகள், பினாமி சொத்துகளாக கருதப்பட்டு அரசு அவற்றை கையகப்படுத்தும்.
இதற்கு பல்வேறு மட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்திட்டத்தை மோடி அப்போது கிடப்பில் போட்டார்.
தற்போது, இத்திட்டம் கிராமங்களில் இருந்து ‘சொத்து அட்டை’ என்ற பெயரில் வேறு பெயரில் நுழைகிறதோ என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் மாநில அரசு வரம்பிற்க்கும் இருக்கும் நில உரிமையை மத்திய அரசு தனக்கு அதிகாரமில்ல திட்டம் மூலம் நிறைவேற்ற பார்க்கிறது எனவும் வழக்கறினர்கள் தெரிவித்து உள்ளனர் .. ஆதனால் நீதிமன்றம் மூலம் சரியாக நிர்ணயிக்க படாத ‘சொத்து அட்டை’ திட்டத்தை சட்ட பூர்வ உரியமையை கேள்வி கேக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்
ஸ்வமித்வா’ திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை பிரதமர் மோடி நாளை வெளியிட்டு, கிராம மக்களுக்கு வழங்க உள்ளார்.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான கடந்த ஏப்ரல் 24ம் தேதி, ‘ஸ்வமித்வா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் சொத்து வைத்திருப்பவர்களுக்கு, ‘சொத்து அட்டை’ வழங்கப்படும். அவர்தான் அந்த சொத்தின் உரிமையாளர் என அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த சொத்து அட்டைகளை பயன்படுத்தி, கிராம மக்கள் வங்கிகளில் கடன் வசதிகளை பெறலாம்.
இந்நிலையில், முதல் முறையாக பிரதமர் மோடி இந்த சொத்து அட்டைகளை அறிமுகப்படுத்தி, அவற்றை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சி நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்க உள்ளது. இதில், 6 மாநிலங்களில் 763 கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சொத்து அட்டை வழங்கப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தில் 346 கிராமங்கள், ஹரியாணாவில் 221 கிராமங்கள், மகாராஷ்டிரத்தில் 100 கிராமங்கள், மத்திய பிரதேசத்தில் 44 கிராமங்கள், உத்தரகண்டில் 50 கிராமங்கள், கர்னாடகத்தில் 2 கிராமங்கள் என மொத்தம் 763 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த சொத்து விவர அட்டையைப் பெறவுள்ளனர்
இதில், மகாராஷ்டிரத்தை தவிர மற்ற மாநிலங்களைச் சோ்ந்தவரகள் ஓரிரு நாளில் சொதது விவர அட்டையைப் பெறுவார். மகாராஷ்டிரத்தில் சொத்து விவரங்கள் மதிப்பீடு செய்யப்படும் பணி நடைபெற்று வருவதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் , இந்த அட்டையைப் பெறுவதற்கு ஒரு மாதமாகும்.
கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்க மக்கள் தங்கள் சொத்துகளைக் காண்பித்து கடனுதவி, நிதிச் சலுகை ஆகியவை பெறுவற்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் சில பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.