சமூக நீதி நாளான தந்தை பெரியாரின் பிறந்தநாளில் சம கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, கலப்புத்திருமணம், தீண்டாமை எதிர்ப்பு, மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு நிலை, கைம்பெண் மறுமணம் என பெரியாரின் கொள்கைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை ‘சமூகநீதி நாள்’ என அறிவித்து அரசாணை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை முதல் குமரி வரை அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பிற்கு முன்னதாக தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஒடுக்கப்பட்டோர் ஒளிபெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது.
அத்தகைய பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே எடுத்துக் கொண்டது.
சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா!#HBDPeriyar143 pic.twitter.com/fsfreATuTa— M.K.Stalin (@mkstalin) September 17, 2021
இந்நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு துறைச் செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். சம கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, கலப்புத்திருமணம், தீண்டாமை எதிர்ப்பு, மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு நிலை, கைம்பெண் மறுமணம் என தந்தை பெரியாரின் கொள்கைகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் வரைந்த தந்தை பெரியாரின் ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தந்தை பெரியாரின் ஒவியங்களை வரைந்த பொன்வண்ணனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
[su_image_carousel source=”media: 26468,26465,26466,26467,26469″ crop=”none” captions=”yes” image_size=”full”]