உலக அளவில் மருத்துவம், இயற்பியல்,வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட பிரிவுகளில் தன்னிகரற்ற பங்களிப்பை அளித்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக இன்று முதல் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக மருத்துவத்துகான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
2018- ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு ஸ்வீடனின் சுவரோனாவில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் வைத்து இன்று அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு குழு தலைவர் தாமஸ் பெர்ல் மேன் இதனை அறிவித்தார்.
எதிர்மறையான நோயெதிர்ப்பு கட்டுப்பாட்டு தடுப்பு மூலம் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்காக ஜேம்ஸ் பி. அலிசன் மற்றும் தசுக்கு ஹன்ஜோ இருவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் சமமாக பகிர்ந்து கொள்கிறார்கள்.