துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருண்டது.

அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 47, ஷோயிப் மாலிக் 43 ரன்கள், ஆசிப் அலி 9, ஷதாப் கான் 8, பாகீம் அஷ்ரப் 21, முகமது ஆமிர் 18 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து 163 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 29 ஓவரில் 164 ரன்களை எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. அணியில் ரோஹித் சர்மா 52, ஷிகர் தவன் 46 ரன்களுடன் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து அம்பட்டி ராயுடு 31, தினேஷ் கார்த்திக் 31, ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று போட்டி 23-ம் தேதி நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ,ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன எனபது குறிப்பிடதக்கது

Score card : PAK 162 (43.1 Ovs) ; IND 164/2 (29.0 Ovs)

பிசிசிஐ இந்திய அணி எட்டு விக்கெட் வித்தாயசத்தில் வெற்றி

போட்டியின் சிறந்த விளையாட்டி வீரர் : புவனேஷ் குமார்