அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித், அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பு மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க இருக்கிறார்.

சினிமாவின் அடுத்த கட்டமாக வெப்சீரிஸ் மாறிவருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், பிரபலன்கள் பலரும் வெப்சீரிஸ் தயாரிக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

தற்போது இயக்குநர் ரஞ்சித்தும் ஒரு இணைய தொடர் தயாரிக்க இருக்கிறார். இது மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாக இருக்கிறது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை பல மர்மங்களை உள்ளடக்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கியவர் சில்க் ஸ்மிதா. கமல், ரஜினி,பிரபு போன்ற பல முன்னணி சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது வாழ்க்கையில் இருந்து அவரது மரணம் வரை பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பாக சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமானது. மேலும், வெப்சீரிஸ்ஸும் வர இருக்கிறது. இதே போன்று சன்னி லியோனின் வாழ்க்கையும் வெப்சீரிஸ்ஸாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.