திருமணம் சில திருத்தங்களுடன்’ பட இசை வெளியீட்டு விழாவில், பாரதிராஜா, பாக்யராஜ், பாலசந்தர் போன்ற இயக்குனர்கள் இல்லை என்றால் சினிமா உலகமே இல்லை என்று இயக்குனரும், நடிகருமான சேரன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சேரனின் “திருமணம் சில திருத்தங்களுடன்” படத்தில், குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஹீரோவாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்கள்.

மேலும் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் மூத்த இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ். ரவிக்குமார், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் இயக்குனர் சேரன் “இத்திரைப்படம் பொருளாதாரச் சூழ்நிலைகள் எப்படித் திருமணம் மற்றும் குடும்ப உறவுகளுக்கிடையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதை எப்படித் தவிர்ப்பது என்பதைப் பற்றி அலசும் ஒரு படைப்பாக இருக்கும்.

மூத்தவர்களை எப்போதுமே மதிக்கவேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையைச் செய்ய வேண்டும். பாரதிராஜா, மகேந்திரன், பாலசந்தர், பீம்சிங், பந்துலு, பாலுமகேந்திரா, கே.பாக்யராஜ் கே.எஸ். ரவிகுமார் இல்லையென்றால், இன்றைக்கு சினிமா உலகமே இல்லை. இவர்களுக்கு நாம் மதித்து மரியாதை செய்யவேண்டும்” என்று கூறினார்.