மலையாள நடிகரும் பாஜக கட்சி அதரவாளருமான கொல்லம் துளசி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களை பாதியாக வெட்டிப்போட வேண்டும். ஒரு பாதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும்.” எனக் கூறினார்.
இதறகு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய மலையாள நடிகர் கொல்லம் துளசி மீது கேரளாவில் வழக்கு பாய்ந்துள்ள நிலையில் ஐயப்பன் மீதுள்ள அதிக பக்தியால் அப்படிப் பேசியதாக பல்டி அடித்துள்ளார் ..
மேலும் அவர் ” ஐயப்ப பக்தியால் கொலைவெறி வந்துவிட்டது. யோசித்துப் பார்க்கும்போது ஒரு பிரமுகராக இருந்துகொண்டு பொது இடத்தில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது எனத் தோன்றியது. அதற்கு முழு மனதான மன்னிப்பு கோருகிறேன்.” என்று தழுதழத்த குரலில் கெஞ்சி கோரியுள்ளார் கொல்லம் துளசி.
10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு அனுமதி வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து வரும் 18ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கேரளா அரசு அறிவித்த நிலையில் இதற்கு அர்எஸ்எஸ் தூண்டுதலில் சில அமைப்புகளும் சில பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
ஆனால் சமூக ஆர்வலரும் ‘பூமாதா பிரிகேட்’ அமைப்பின் தலைவருமான திருப்தி தேசாய் சில பெண்களுடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து கேரள அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி பெண்கள் சபரிமலை வந்தால் அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பந்தளம் அரச குடும்பம், சபரிமலை கோயில் பூசாரிகள் மற்றும் இந்து அமைப்புகள் நாளை பேச்சு நடத்த வருமாறு, அய்யப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் வாரிய அலுவலகத்தில் நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அய்யப்ப சேவா சங்கம், அய்யப்ப சேவா சமாஜம், தந்திரி மகாமண்டலம் உள்ளிட்ட அமைப்புகளும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளன.
இதில், அனைத்துத் தரப்பிடமும் கருத்துக் கேட்கப்பட்டு, அதற்கேற்ப பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்றும் சபரிமலை விவகாரத்தை அரசியல் பிரச்னையாக்க தேவசம் போர்டு விரும்பவில்லை. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும். சபரிமலை பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை மாற்ற நாங்கள் நினைக்கவில்லை. அதனை பாதுகாக்கவே விரும்புகிறோம். அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என தேவசம் வாரிய தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்.