உத்தரபிரதேசத்தில் லாரியில் பயணித்த புலம் பெயர் தொழிலாளர்கள் 24 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் வேலையிழந்த ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 81 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஃபரீதாபாத்திலிருந்து கோரக்பூருக்கு லாரி மூலம் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் அவுரியா என்ற பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது ,எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் இரு தினங்களுக்கு முன்னர், இம்மாநிலத்தின் முசாபர் நகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில், பஞ்சாபிலிருந்து பீகார் திரும்பிக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீது உத்தரபிரதேச மாநில அரசு பேருந்து ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: நாட்டை உலுக்கிய அவுரங்காபாத் கோர விபத்து- 17 பேர் பரிதாப பலி
கடந்த வாரம், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், யார் நடந்து செல்கிறார்கள், நடக்கவில்லை என்பதை இந்த நீதிமன்றம் கண்காணிக்க முடியாது. அதுபோல் அவர்களுக்கு தங்குவதற்கு இடமோ அல்லது இலவச போக்குவரத்தோ கொடுக்குமாறு அரசுகளுக்கு உத்தரவிட மறுத்து உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: சொந்த ஊர்களுக்கு திரும்ப போக்குவரத்து கேட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் கற்கள்வீசி திடீர் போராட்டம்