தமிழ் நாட்டில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது ..
முக்கியமாக தலைநகர் சென்னையில் ஒரு லாரி லோடு பெற அரசின் விற்பனை மய்யத்தில் ஆன்லைனில் புக் செய்துவிட்டு 10 நாட்களுக்கு மேல காத்து இருக்க வேண்டி உள்ளது
மேலும் தண்ணீர் பிரச்சனையை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் லோக்கல் ஆளும் அரசியல் புள்ளிகளுடன் இனைந்து 9000 லிட்டர் லாரிக்கு ரூ 3000 முதல் 6000 வரை விலை நிர்ணயம் செய்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர்
இந்த நிலையில் வருகின்ற 27-ம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் நீர்நிலைகள், விவசாய விளை நிலங்களில் தண்ணீர் எடுக்கக்கூடாது என நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 15,000 தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.