சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் “தர்பார்” படத்தில் பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பிரதிக்பாபர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘பாகி 2’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும், இந்த படத்தில் பிரதிக்பாபர், மெயின் வில்லனின் மகனாக நடிக்கின்றார் என்றும் கூறப்படுகிறது
ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு மற்றும் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.