தமிழகத்தில் 41 எம்எல்ஏக்கள் 7 எம்பிக்கள் தலித்துகளாக  இருந்தும் தமிழ்நாட்டில் ஜாதி ஆணவ கொலைகள் இல்லை என தமிழகத்தின் துனைமுதல்வர்   ஓபிஎஸ் பேசுகிறாரே என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் வருத்தப்படுவதை பற்றி ..
 
தலித் அரசியலை தலித்துகளுக்கு பகிர்ந்தளிக்க முடியாத காரணம் தலித்துகள் ஒரு சமூகமாக எழுந்து வராத காரணம்  தலித் சமூகத்துக்குள் வன்மாக இயங்கி கொண்டே இருக்கும் ஜாதி உட்பிரிவு அரசியலை அவர்கள் விடாமல் பிடித்து தொங்குவது தான் என ஒற்றை வரியில் எழுதி விட்டு கடந்து விட சென்று விடலாம் ..
 
இது பிரச்சனையின் கால்கோள் விழாவின் மையபகுதியில் சிக்கி கொள்ளமால் இருக்க சுலபமாக செல்லும் மாற்று வழி ..
 
தலித் எனற போர்வையில் ஒருமுகப்படுத்துவது மேலும் சாதி மோதலை வளர்த்து, மேலும்  பிரிவினையை தான் வளர்க்கும் என்பது சமூகத்து பால் அக்கறை கொண்டோர்க்கு   புரியாதாது  இல்லை ..
 
திராவிடத்தின் உயிர் நாடியே தலித்தியத்தை மேம்படுத்தி அதனை இரண்டாம் இடத்தை நோக்கி நகர்த்தி., ஒரு கூறாக மேல எழும்பி பலமிக்க ஒரே படிவமாகி …
 
பின்னர் முதல் படிவமான உயர்ந்த ஜாதியை நோக்கி அது பயணித்து வரும்  அதிகாரத்தை நோக்கி கேள்விகள் எழுப்புவது மட்டும் அல்ல ..
 
அதனை ஜனநாயக முறைப்படி தீர்க்கும் தீர்வென்பது சமூக சிந்தனையான அனைவரும் அர்ச்சகர், சாதி மறுப்பு திருமணம் எனும் ஒரு அருமருந்து தான்..
 
ஆனால் இங்கு திராவிடம் இதற்க்கு முழு சரியான சாதி மறுப்பு திருமணம் என்பதை தந்து உள்ளதை மறைத்து அது தரும் சமூக எழுச்சியை மறைத்து விட்டு., இங்கே விவேகனந்தர் வர்ணாசரத்தில் புகுத்தும் முதல் படிமத்தை குறி வைத்து தாக்கிய பேச்சில் கருத்தை  மறந்து விட்டு  …
 
//ஆரிய வம்சத்திலிருந்து தோன்றியதாகப் பெருமை அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்களே; நீங்கள் எவ்வளவுதான் பெருமை பேசினாலும், எவ்வளவுதான் புகழ் இசைத்தாலும்; உங்கள் குலப்பெருமை உணர்ச்சியினால் கர்வமடைந்து சொகுசு நடைப்போட்டாலும், உங்களுக்கு உயிர் இருப்பதாக, சிந்தனை இருப்பதாக ஏற்க இயலாது. பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம்போல இருக்கிறீர்கள். நீங்கள் யாரை சவம் என்று வெறுத்து ஒதுக்கினீர்களோ அவர்களிடையேதான் (ஒடுக்கப்பட்டோர்) பாரதத்தின் எதிர்கால வீரிய சக்தி எஞ்சி நிற்கிறது! மாயை நிறைந்த இவ்வுலகில் நீங்கள் தான் உண்மையான மாயை; புரியாத புதிர்; பாலைவனத்தில் காணப்படும் கானல்நீர். பாரதத்தின் உயர் வகுப்பாரே உங்களைத் தான் சொல்கிறேன் நீங்கள் இறந்த காலத்தின் பிரதிநிதி அதில் எல்லா விதமான வடிவங்களும் ஒரே குளறுபடியாகக் கலந்து கிடக்கின்றன. நீங்கள்தான் சூன்யம். வருங்காலத்தில் உருப்படியில்லாமல் போகப்போகிற திண்மையில்லா வஸ்துக்கள் கனவு உலக வாசிகளே நீங்கள் இன்னும் ஏன் நடமாடுகிறீர்கள்? கடந்து போன பாரதத்தின் சதையற்ற, இரக்கமற்ற வெற்று எலும்புக் கூடுகளாகிய நீங்கள் ஏன் மண்ணில் கரைந்து, காற்றிலே கலந்து மறைந்து விடக்கூடாது? இந்த நாட்டின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் எல்லாம் உங்கள் கையுள் நாற்ற மடிக்கும் உங்கள் கரங்களிலிருந்து அவற்றை விடுவித்து உரியவர்களிடம் சேர்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை.இப்பொழுது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், கல்வியும், ஞான ஒளியும், சுதந்திரமாகக் கிடைக்கும் இந்த நேரத்தில் உரியவர்களிடம் ஒப்படையுங்கள். ஆம் முடிந்த அளவு விரைவாய் அவற்றை ஒப்படையுங்கள் நீங்கள் சூனியத்தில் முழ்கி மறைந்து விடுங்கள் நீங்கள் விலகிய இடத்தில் நவபாரதம் எழட்டும். நவபாரதமானது உழவனின் குடிசையிலிருந்து ஏர் பிடித்து வெளிவரும்; மீனவர், சக்கிலியர், தோட்டி இவர்களின் குடிசைகளிலிருந்து நவ பாரதம் வெளித் தோன்றும். பல சரக்குக் கடைகளிலிருந்து, தோசை விற்கிறவனின் அடுப்படியிலிருந்து நவ பாரதம் தோன்றட்டும். தொழிற்சாலைகளிலிருந்தும், கடையிலிருந்தும், சந்தையிலிருந்தும் நவ பாரதம் காட்சி தரட்டும். தோட்டங்களிலிருந்தும், காடுகளிலிருந்தும், குன்றுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும், அந்த நவ பாரதம் வெளிவரட்டும். இந்தப் பாமர மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கி நசுக்கப்பட்டிருக்கிறார்கள். முணுமுணுக்காமல் கஷ்டங்களைச் சகித்திருக்கிறார்கள்.அதன் விளைவாக ஆச்சரியகரமான பொறுமையும் தைரியமும் பெற்றுள்ளார்கள். முடிவில்லாத துன்பத்தை அவர்கள் அநுபவித்ததன் பயனாக, வளையாத ஆண்மைச் சக்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவு தானியத்தை வைத்துக் கொண்டு, உயிர் வாழ்ந்து அவர்கள் இந்த உலகத்தையே உலுக்கி ஆட்டி விடுவார்கள். அவர்களுக்கு அரை வயிற்று உணவு கொடுங்கள். பிறகு தோன்றுகிற அவர்களது சக்தியைப் பாருங்கள்.. கோடிக் கணக்கான இடியொலிகள் கலந்தாற் போல உலகெங்கும் எதிரொலி செய்ய “வாஹ் குரு கீ பதேஹ்” ‘குருதேவருக்கு ஜே’ என்ற முழக்கம் வானோங்கி எழும்.//
ஆதாரம் விவேகனந்தர் : எழுமின்விழிமின்  – (ஹிந்து ராஷ்டிரத்துக்கு அறைகூவல் பக்-150-152) 
 
 
முக்கியமாக  அனைவரும் அர்ச்சர்கர் மற்றும் சாதி மறுப்பு திருமணம் என்ற இலக்கு எதுவென பெரியார் ,அண்ணா சுட்டி காட்டிய  திராவிடம் நமக்கு கற்று தராமல் இல்லை .. 
 
இத்தகைய கொள்கையை  தவிர்த்து பயணிப்பது தற்கொலைக்கு சமம் . ஆதலில் திராவிடத்தை கையில் எடுத்து தலித் சமூகம் நோக்கி நகர்கையில் அதன் வீச்சு வலிமை பெறுவதாக எடுத்து கொள்ள பட வேண்டிய காலகட்டத்தில் நாம்  உள்ளோம். 

அதை போல இலக்கில்லாமல்  எப்படி செல்ல வேண்டும் என தமிழ் தேசியம் பேசும் சீமான்களும்  பின்னால் இருந்து இயக்கும்  கோமான்களும், சினிமா போர்வையில் மாய மானை நோக்கி ராமனை ஓட சொன்னா சீதா பிராட்டி போல மாய  உலகத்தில் சஞ்சரிக்கும் ரஞ்சித்துகளும் மடைமாற்றி  குழப்பி வருவதை காணும் போது வருத்தம் நமக்கு எல்லாம் அவைகள் தராமல்  இல்லை..

 
ஆனாலும் குழப்பம் நல்லது தான் எனெனில் தீர்வும் அதனுள்ளே தானே உள்ளது என்ற இயற்கை அன்னை நமக்கு சொல்லி கொடுத்த கோட்பாட்டை மனத்தில் வைத்து ..
 
சாதி படிமங்களை உடைப்பதில் திராவிட சிந்தனையாம் அனைவரும் அர்ச்சர்கர் மற்றும் சாதி மறுப்பு திருமணம் எதிர்ப்பவர்களை., அதிலும் மிக முக்கியமாக என்ன செய்தது திராவிடம் என செவ்வாழை நந்தவனத்தில் குதித்து ஆடும் குரங்குகளை போன்று அரற்றுபவர்களை  கூர்மையோடு கவனித்து வாருங்கள்  ..
அவர்கள் பிண்ணனியில் மட்டும் அல்ல., அவர்களே வகுத்து கொண்ட ஜாதி தட்டில் நானே உயர்ந்தவன் எனும் முதல் படிவத்தில் அமர்ந்து கள்ள சிரிப்பு புன்சிரிக்கும் கோட்டான்களாகளுடன்.. 
 
சாரை பாம்புகள் என  சல்லாபத்துடன் பிணைந்து பிண்ணி இருக்கும் காட்சியையும்  தமிழராகிய நாம்  காணலாம் …
 
பெரியார் விரும்பிய அண்ணா காட்டிய திராவிடத்தை திமுக அதிமுக அமமுக  போன்ற கட்சிகள்   தவறாமல் போராடுகிறதா, தவறும் பட்சத்தில் போரடாமல் செல்லும் அதன் தலைமையை எப்படி கூர் தீட்ட வேண்டும், மாற்று சிந்தை எப்படி கொணர வேண்டும்  என்பதே நம் போன்றவர்களில் சிந்தனையில் சமூக அக்கறை மிகுந்து இருத்தலே திராவிடத்துக்கு என்றில்லை., தலித்தியம் விரும்பும் தோழர்களுக்கும்., தமிழ் மொழி காதலர்களுக்கும் சரியானாதாக இருக்கும் என அவதனிக்கிறேன்  ..
இதை விடுத்து தமிழ் தேசியம் தெலுங்கு பொறியல் , கன்னட அவியல் , கேரளா பணியாரம் வன்னியர்களின்  எழுச்சி ,கோனார்களின் சுழற்சி, தேவர்களின் வீரம் , கவுண்டர்களின் வெற்றி , முதலியார்களின் முதிர்ச்சி , தலித்துகளின் தீரம் , நாடார்களின் கூட்டு முயற்சி, பிரமணர்களின் மதிநுட்பம்  என்றெல்லாம் சாதி பற்றோடு   பேசி திரிபவர்களை..
 
படிப்பு நமக்கு கற்று தந்த அழிக்கவே முடியாத கூர் அயுதமாம் அறிவு எனும் வலிமையான பார்வையால் கொண்டு ஊடுறுவ நாம் எண்ணுவோமானால்   ..
 
நம்முடைய  அந்த பார்வை  ஊடுகதிராக மாறி உண்மையை புரிய மட்டும் இல்லை தெளியவும் வைக்கும் .. காரணம் சாதி பற்றும் , மத தீவிரமும் சமூகத்தை சீரழிக்கும்  நச்சுகள் அன்றி வேறில்லை ..