தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்த கோரிக்கையை பார்த்து அஜித், விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து விமர்சித்துள்ளனர்.
திருப்பூரில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியில் இணையும் விழா தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஹரி அஜித் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவந்தரராஜன், “தேர்தல் பிரச்சாரத்திற்காக பிப்ரவரி 10ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, மிகப்பெரிய பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்றார்.
மேலும் பேசிய தமிழிசை, திரைத்துறையில் மிகவும் நேர்மையான நடிகர் அஜித். அவர் பலருக்கு நல்லதை செய்துள்ளார். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். இனி மோடியின் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இறுதியில், அஜித் ரசிகர்கள் தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜனின் கோரிக்கையை பார்த்த அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்புககளை தெரிவித்து வருகின்றனர். அதில், “நாங்க விஜய் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தாலும் சேருவோமே தவிர பிஜேபிக்கு ஒருநாளும் பிரச்சாரம் செய்யமாட்டோம்.
விஜய், அஜித்துனு எங்களுக்குள்ள சண்டை இருந்ததாலும், தாமரை மலர கூடாது என்ற விஷயத்தில் நாங்க ஒற்றுமையா செயல் படுவோம் தமிழிசை மேடம்.
பாஜகவுக்கு பிரச்சாரம் செய்யும் அந்த தப்பை மட்டும் பண்ணவே மாட்டோம்” என்று அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.