‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஷால் தலைமைச் செயலகத்தில்  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், “ஜூலை முதல் வாரத்தில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைப்பெற வாய்ப்புள்ளது. நாங்கள் முதல்வரிடம் திரைப்படங்கள் வெளியீட்டில் ஆங்கிலப்படங்களை விட தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவும், வரி விதிப்பு விவகாரத்தில் மற்ற மொழி திரைப்படங்களை விட தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை ஒழிக்க நான் கஷ்டப்பட்டாலும் முழுமையாக தன்னால் மட்டும் முடியாது என்றும், தமிழக அரசு, மத்திய அரசு நினைத்தால், ஒரே நாளில் ஒழித்துவிட முடியும். இதுதொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.