ஆக்க்ஷன், காமெடி என கலக்கி, உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர் நடிகர் ஜாக்கிசான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் உண்டு.
சினிமாத் துறையில் இவர் ஆற்றிய ஒப்பற்ற பணிக்காக, வாழ்நாள் சாதனையாளர் என்ற பிரிவில் ஆஸ்கார் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1990-ஆம் ஆண்டு ஆசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எல்லெய்ன் நக். இவருக்கும் நடிகர் ஜாக்கிசானுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தில் பிறந்தவர் எட்டா நக். எட்டா நக் (வயது 19 ) சமீப காலங்களாக ஓரின செயற்கையாளராக மாறி தன்னுடைய பெற்றோரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கனடா நாட்டைச் சேர்த சமூக ஊடக பிரபலமான அட்டுன் (வயது 31 ) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எட்டா நக் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டைச் சேர்த சமூக ஊடக பிரபலமான அட்டுன், கனடா நாட்டில் ஊடக சார்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்களது நிறுவனத்தினை திறம்பட செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எட்டா நக் தனது ஓரினச்சேர்க்கையாளர் அட்டுனம்(வயது 31) குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் முதன்முதலாக இணையத்தில் வெளியிட்டார்.
இந்த பதிவிற்கு பின்னரே எட்டா நக் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது உலகிற்கு தெரியவந்தது. இந்நிலையில் தற்போது இவ்விருவரும் தங்களது திருமண செய்தியினை உலகிற்கு தெரியபடுத்தி உள்ளனர்.
தங்களது திருமண சான்றிதழினை வெளியிட்டுள்ள எட்டா நக், தங்களது திருமணம் கனடா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தன் மகள், ஓரின சேர்க்கையாளர் என்பதை அறிந்தது மனம் உடைந்து போன ஜாக்கிசானும் அவருடைய மனைவியும் மேலும் இந்த தகவலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.