சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால கிரிக்கெட் பயிற்சியாளாரான ரமாகாந்த் அச்ரேக்கா் நேற்று (ஜனவரி 2 புதன்கிழமை) உயிரிழந்தார். 87 வயதான அச்ரேக்கர், வயது முதிர்வின் உயிாிழந்த நிலையில் அவரது உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி நடைபெற்றது.

கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்து கிரிக்கெட் ரசிகா்கள் அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்பவா் சச்சின் டெண்டுல்கா். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது கொண்ட அதீத காதலால் அவா் பல்வேறு சாதனைகளை தமதாக்கினாா். சச்சின் டெண்டுல்கா் முதலில் பந்து வீச்சில் தான் கவனம் செலுத்தினாராம். ஆனால், அவரது தொடக்க கால பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேக்கா் தான் அவரை பேட்டிங்கில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளாா். அதன்படி பேட்டிங் ஆடத் தொடங்கிய சச்சின் இன்று பல்வேறு சாதனைகளை செய்துள்ளாா்.

இந்நிலையில், ரமாகாந்த் அச்ரேக்கரின் மறைவு செய்தியைத் தொடா்ந்து இரங்கல் தொிவித்த சச்சின் டெண்டுல்கா், “அச்ரேக்கரின் மறைவால் இனி சொா்க்கத்திலும் கிரிக்கெட் வளம் பெறும். எனது கிரிக்கெட் உலகின் ஏ பி சி டி யை அவரிடம் தான் கற்றேன். இன்று நான் இருக்கும் இடத்திற்கு அடித்தளம் இட்டவா் அவா்தான்” என்று புகழ் அஞ்சலி செலுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து மும்பை தாதா் பகுதியில் நடைபெற்ற இறுதி அஞ்சலியில் சச்சின் டெண்டுல்கரும் கலந்து கொண்டாா். களங்கிய கண்களுடன் கலந்து கொண்ட சச்சின், தன்னை உருவாக்கி வளர்த்தெடுத்த குருவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சச்சின் சுமந்து சென்றார்.