செல்வி #ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் “வேதா நிலையம்” வீட்டை #அதிமுக அரசு நினைவு சின்னமாக ஆக்கியது செல்லாது என அதிரடியாக இன்று சொல்லி விட்டதே உயர்நீதிமன்றம்..
நம் வரி பணத்திலே செல்வி ஜெயலலிதா நினைவிடத்துக்கு 93 கோடிகள் அதிமுக அரசு செலவு செய்தது ஒரு பக்கம்.. அரசுடமையாக்க முன் அவர் செலுத்தவேண்டிய பெனால்டி கட்டி செல்வி போயஸ் கார்டன் வீட்டை நம் வரி பணத்திலே 68 கோடி வருமான வரித்துறைக்கு செலுத்தி வாங்கியும் உள்ளது அதிமுகவின் அரசு மறு பக்கம்..
ஆக செல்வி ஜெயலலிதா தண்டிக்கபட்ட குற்றவாளியாக ஆன பின்னரும் தமிழ் நாட்டு மக்கள் வரி பணத்திலே எடுத்து கொண்ட பணம் ரூ 161 கோடிகள்..
யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதுபோல செல்வி ஜெயலலிதா இருந்தாலும் மக்களிடம் நுற்றுக்கணக்கான கோடிகளில் சுரண்டுவார்.. பின்னர் அதன் காரணமாக மூன்று முறை நீதிமன்றத்திலும் ஊழலுக்காக தண்டிக்கபடுவார்..
ஆனாலும் இறந்தாலும் அவர் பெயரிலே அதிமுகவினர் ஆயிரகணக்கான கோடிகளின் சுரண்டுவதும் கடந்த 4 ஆண்டுகளாக நடந்தது.. #அம்மா உணவகம் என நாகரிகம் பேசும் #திமுக அரசுக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பின் முலம் மிக முக்கிய மெசஜ் அடங்கி உள்ளது..
18 February 1992 அன்று மகாமக குளத்தில் இரு தோழிகளும் மாறி மாறி நீராட இதனால் உண்டான கூட்டநெரிசலில் மிதிபட பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட 50 பேரை கொன்றார்கள்.. இறந்தவர்கள் ஒரு பக்கம் என்றால் மேலும் இவர்கள் நீராடியதால் 72 பேருக்கு இன்றும் உடம்பில் பல பாகம் ஊனமாகி போனது..
செல்வி அவரின் தோழி சந்திரலேகா முகத்தில் மீது வீசிய ஆசிட்.. சார்ஜ் ஷீட் கூட போட வக்கற்ற வழக்கில் 78 வயது முதியவரான Kalaignar Karunanidhi தரதரவென இழுத்து வரப்பட்டு மிட் நைட் கைது என்று எழுத தொடங்கினால், செல்வி செய்த ஆராஜக பட்டியல் அமேசான் வசிக்கும் அனகோண்ட பாம்பு விட அதிகமாக நீளும்..
இதை எல்லாம் கருத்தில் கொண்டு நீதியின் வலிமையை.. பாதிக்கப்பட்டவர்களின் வலியை புரிந்து கொண்டு Chief Minister of Tamil Nadu உடனடியாக தலையீட்டு தண்டிக்கபட்ட குற்றவாளி படத்தினை அரசு இடங்களின் அரசு திட்டத்தில் தூக்கி எறிவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும்..