017ம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, முதல் முறையாக கடந்த மாதம்தான் அதிகபட்ச அளவு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.06 கோடி வசூல் ஆகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு மத்திய ஜிஎஸ்டி மூலம் ரூ.6.10 லட்சம் கோடி, காம்பன்சேஷன் செஸ் மூலம் ரூ.1.01 கோடி வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
ஆனால் கடந்த நிதியாண்டில் மத்திய ஜிஎஸ்டி ரூ.4.25 லட்சம் கோடியும், காம்பன்சேஷன் செஸ் ரூ.97,000 கோடியும் வசூல் ஆகியிருந்தது.
 
கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரத்தை நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதம் ரூ.1,13,865 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது.
 
கடந்த மாதம் ஜிஎஸ்டி ரூ.1.13 லட்சம் கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு இதுவே உச்சபட்ச வசூல் அளவாகும்.
 
இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.21,163 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.28,801 கோடி, மாநிலங்களுக்கு இடையிலான ஜிஎஸ்டி ரூ.54,733 கோடி.
 
கடந்த மாதம் 30ம் தேதி வரை 72.13 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3பி படிவங்களை வணிகர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில் மார்ச் மாதத்துக்கான வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளனர்.
 
கடந்த மாத வசூலில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.20,370 கோடி, மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.15,975 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.