உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை என்ற பகீர் தகவல் அதர்ச்சியை தந்துள்ளது
 
இதுமட்டுமின்றி, 385 பள்ளிகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான மாணவ, மாணவியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
இதற்கு முந்தைய காலகட்டத்தில் உயர்நிலைப் பள்ளி தேர்வில் அதிகப்படியாக காப்பி அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் கௌசாம்பி இடத்தில் உள்ள 13 பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெறவில்லை.
 
இதுபோலவே, மேல்நிலைப் பள்ளி தேர்வில் அலிகார் மற்றும் மணிபூரில் தலா 7 பள்ளிகள் பூஜ்ஜிய சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே பள்ளி தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உத்தரப்பிரதேச பள்ளிக் கல்வி இயக்குநரான வினய் குமார் கூறியுள்ளார்.
 
10-ஆம் வகுப்பை பொருத்தவரை 50 அரசு பள்ளிகளும், 5 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 84 தனியார் பள்ளிகளும் வெறும் பூஜ்ய சதவிகிதம் மட்டுமே தேர்ச்சியை பெற்றுள்ளன.
 
12-ஆம் வகுப்பை பொருத்தவரை 15 அரசுப் பள்ளிகளும், 58 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 176 தனியார் பள்ளிகளும் வெறும் பூஜ்ய சதவிகித தேர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஐந்து வருடமாக திராவிடத்தால் விழ்ந்தோம் என பாஜகவினர் கூறி வந்த நிலையில் தமிழ் நாட்டில் தேர்வு சதவிதம் 93% சதவிதம் வந்த நிலையில் பாஜக ஆளும் 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை என்ற பகீர் தகவல் திராவிடத்தால் விழ்ந்தோம் என கூறி வந்தவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாம்