சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் “தர்பார்” படத்தின் படப்பிடிப்பில் நடிகர் யோகிபாபுவும் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் தர்பார் படத்திற்காக அவர் தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதால் அவர் நடித்து முடித்துள்ள ‘தர்மபிரபு’ மற்றும் ‘அ1’ ஆகிய படங்களின் டப்பிங் பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த இரண்டு படங்களின் டப்பிங்கை மும்பையில் வைக்க சொன்ன யோகிபாபு, தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மும்பையில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் இந்த இரண்டு படங்களின் டப்பிங் பணியை முடித்து கொடுத்துள்ளாராம் யோகிபாபு.

யோகிபாபுவின் கடுமையான உழைப்பு மற்றும் தொழில்மீது அவர் வைத்துள்ள பக்தி ஆகியவற்றை உடனிருந்து கவனித்த ரஜினிகாந்த், அவரை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும், அவர் நிச்சயம் சினிமாத்துறையில் பெரிய ஆளாக வருவார் என்றும் கூறியுள்ளாராம்.

மேலும் தர்மபிரபு டீசரை பார்த்த ரஜினிகாந்த், இப்படத்தை தான் பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டாரிடம் பலர் நடிப்புக்காக பாராட்டு பெற்றதுண்டு. ஆனால் கடுமையான உழைப்புக்காக அவரிடம் பாராட்டு பெற்ற மிகச்சிலரில் யோகிபாபுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையிலுள்ள பிரபலமான கல்லூரி வளாகத்தில் தர்பார் படப்பிடிப்பு நடக்கிறது. கல்லூரியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பை கல்லூரிக்கு வரும் மாணவர்கள் குழுமி இருந்து வேடிக்கை பார்ப்பது வழக்கம். தற்போது அப்படி ஒன்று கூடுபவர்களை அவர்களது மொபைலில் படம் எடுக்க விடாமல் தர்பார் செக்யூரிட்டிகள் பார்த்துக் கொண்டனர்.

இதனால் படக்குழுவினருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரியின் மாடிக்கு சென்ற மாணவர்கள் படப்பிடிப்பை நோக்கி கற்கள் வீசும் அளவுக்கு சென்று இருக்கிறது. இதுகுறித்து தர்பார் படக்குழு கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சமரசம் ஏற்படாவிட்டால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை மாற்றிவிடலாமா என்ற ஆலோசனையில் முருகதாஸ் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.