சின்மயி ,லீனா, லட்சுமி ஆகிய முவரும் இணைந்து நடத்திய பிரஸ் மீட் மோதலில் முடிந்தது.இதனை ” மீ டூவால் இணைந்த மகளிர் அணி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தித் தேறியதோ இல்லையோ, அந்த சந்திப்பே, ஒரு செய்தி ஆகி விட்டது ” என செய்தியாளர்கள் தெர்வித்தனர்.
இதற்க்கு காரணம் சின்மயி வைரமுத்து மீது சொன்ன “மீடூ ” குற்றசாட்டியில் செய்தியாளர் சந்த்திப்பில் கவிஞர் வைரமுத்து பாலியல் தொந்தரவு செய்த ஆண்டு நினைவில்லை என்றும்., தொலைந்து போன எனது பாஸ்போர்ட் கிடைத்தால் தான் எந்த ஆண்டு என தெரியவரும் என்று சொன்ன பாடகி சின்மயியின் பதில், திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை என்ற கருத்தையே உருவாக்கியது தான் என செய்தியாளர்கள் தெர்வித்தனர்.
மேலும் இயக்குநர் சுசி கணேசனை குற்றம்சாட்டியுள்ள லீனா மணிமேகலை, சம்பவம் நடைபெற்ற தேதி, இடம், எந்த அரங்கம், என்ன நிகழ்ச்சி என்பதை ஏன் விளக்கவில்லை என்றும் ., பாலியல் தொல்லை அளித்த மேலும் சில ஆண்களின் பெயர் பட்டியலை வெளியிடப் போவதாக சொல்லி விட்டு, இன்னும் அவர் வெளியிடாதது ஏன் என்றும் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாத லீனா மணிமேகலை .,
பல ஆண்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றம் சுமத்தும் லீனா, சுசியை மட்டும் குறி வைத்து அசிங்கப்படுத்த முயல்வதில், உள் நோக்கம் இருப்பதாக தெரியவில்லையா என்ற கேள்விக்கு கோபப்பட்டு செய்தியாளர் சந்திப்பை புறக்கணிக்க போவாதாக லீனா தெரிவித்ததும் நிருபர்களின் முகத்தை சுளிக்க வைத்தது என செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் சுசியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினி வாய்ப்பை கேட்டுப் பெற்று அவரது மனைவி மஞ்சரிக்கும் அறிமுகமான லீனா மணிமேகலை, சுசி தவறு செய்திருந்தால், பழகியவர் என்ற அடிப்படையில், அதை அவரது மனைவியிடம் கூட ஏன் முறையிடவில்லை என்று கேள்விகளுக்கு லீனா பதிலளித்தால், அவரது குற்றச்சாட்டின் மீது நம்பகத்தன்மை உண்டாகும் என்றும் குறிபிட்டனர் .
செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் தங்கள் நிலையே அவர்கள் திரும்ப திரும்ப கூறியாதால் அது மோதலில் முடிந்த சின்மயி ,லீனா, லட்சுமி பிரஸ் மீட் பல் வேறு விவாதங்களை சமூகவலை தளத்தில் ஏற்படுத்தி வருகிறது.
தொடர்பு செய்திகள் : ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு