தமிழக சுகாதாரத்துறை இன்று (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் புதிதாக 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1000க்கும் கீழ் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக இன்று 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 1,39,720 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் அரசு மருத்துவமனையில் 51 பேர், தனியார் மருத்துவமனையில் 28 பேர் என மொத்தம் 79 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 12 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,826 ஆக உள்ளது.
இந்நிலையில், ஒரேநாளில் 6,334பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,92,507 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை, 51,633 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வாசிக்க: பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- தமிழக அரசு