கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக அரசின் தவறான நீர் மேலான்மை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.
 
முக்கியமாக சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேன்சன்கள், ஹோட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
 
சென்னையில் திமுக ஆட்சியில் கொண்டு வந்த மெட்ரோ ரயில் நிலையத்திலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் கழிவறையும் முடிய ஆபாயமும் நேர்ந்துள்ளது
 
மேலும் கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் கிட்டத்தட்ட மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
 
இந்நிலையில் நீர் பற்றாக்குறை காரணமாக 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் அனுமதி பெற்றே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறும்போது, “ தண்ணீர் பிரச்னை இங்கும் அதிகம் காணப்படுகிறது. எனவே அதிக விலை கொடுத்துதான் வாங்கி வருகிறோம். அத்துடன் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கும் வசதியும் இல்லை.
 
அதனால் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைந்து விடும். அதன்பின் வழக்கம்போல பள்ளிகள் செயல்படும்” என தெரிவித்துள்ளனர்.
 
முன்னதாக மூன்று நாட்களுக்கு முன்னால்  தமிழகத்தில் நிலவி வரும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
 
மேலும் அவர் ” தமிழகத்தில் சுமார் 62 சதவீதம் பருவமழை பொய்த்துள்ளது. இதன் காரணமாகவே தீவிர தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
 
கடந்தத 2017-ம் ஆண்டு கடும் வறட்சி நிலவிய போதே, மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்தது. நடப்பாண்டிலும் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்
 
சென்னையில் நாளொன்றுக்கு 520 மில்லியன் லிட்டர் தண்ணீர் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
 
சென்னையை பொறுத்த வரை நாளொன்றுக்கு 9100 நடைகள் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேரூராட்சி, நகராட்சி என எங்கு நீர் ஆதாரம் கிடைத்தாலும், உடனடியாக கொண்டு வந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றார்.
 
மேலும் பேசிய அமைச்சர் மாநிலம் முழுவதும் ஏராளமான வறட்சி நிவாரண பணிகள் நடைபெற்றுள்ளன. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து, குடிநீர் திட்டங்களுக்காக ரூ.5,000 கோடி நிதி வழங்குமாறு கேட்டுள்ளோம் என்றார்.
 
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது எடுத்த நடவடிக்கையை விட, தற்போதைய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க குழு அமைக்கப்பட்டு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
 
இதன் இடையே எட்டு ஆண்டாக சிறப்பாக செயல் பட்டு வரும் அதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. என செல்லூர் ராஜூ கோபத்துடன் தெரிவிக்க பாஜக தலைவர் தமிழிசையோ ஒரு படி மேல போய் ஸ்டாலின் தான் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என ஒரே போடாக போட்டு விட்டார்.
 
திமுக தலைவர் ஸ்டாலின் தனது வலைபதிவில் தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. அதுமட்டுமல்ல ஐ.டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் “ஊழலில்” நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை.
 
திமுகவினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்வதாக வருவது ஆறுதலாக இருந்தாலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தங்களால் மேலும் இயன்றவரை முனைப்புடன் நிறைவேற்றிட வேண்டும் என கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்