சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் மட்டுமே மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி (திங்கட்கிழமை) முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், மதுக்கடைகளில் மது வாங்க ஒருநாளில் 500 டோக்கன் மட்டுமே வழங்கப்படும். மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது. மதுக்கடைக்கு வருவோர் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்- முதல்வர் பழனிசாமி