ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் மே.29 ரிலீஸ் ஆகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
ஜெ.ஜெ. பிரெட்ரிக் இயக்கியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜோதிகா மற்றும் நடிகர் பார்த்திபன் வக்கீல்களாக நடித்துள்ளனர். ட்விட்டரில் பொன்மகள் வந்தாள் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=vzfe8UEJFd0″ autoplay=”yes” title=”பொன்மகள் வந்தாள் ட்ரைலர்”]
ஊட்டியில் குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் மர்மங்களை பற்றி நீந்திமன்றத்தில் நடக்கும் விவாதங்கள் தான் படத்தில் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வாசிக்க: சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய தயாரிப்பாளர்கள்- ‘பொன்மகள் வந்தாள்’ சர்ச்சை
இந்திய அளவில் 7 முக்கிய படங்கள் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும் என ஐநாக்ஸ், பிவிஆர் உள்ளிட்ட சில மல்டிப்ளக்ஸ் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் முடிவுக்கு ஆதரவாக பல தயாரிப்பாளர்களும் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்று வாங்கினால் சிறு பட்ஜெட் படங்கள் ஐந்து வாங்க வேண்டும் என OTT தலங்களுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும் என விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி அறிக்கை வெளியிட்டுயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.