3 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
இதன்படி மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய முன்னணியும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மாநில வாரியாக கட்சிகளின் வெற்றி விவரங்கள் பின்வருமாறு
மத்திய பிரதேசம்:
காங்கிரஸ்- 114, பா.ஜ.க- 109, மற்றவை- 7.
ராஜஸ்தான்:
காங்கிரஸ்- 99, பா.ஜ.க- 73, மற்றவை- 27.
மிசோரம்:
மி.தே.மு- 26, காங்கிரஸ்- 5, பா.ஜ.க- 1, மற்றவை- 8.
தெலுங்கானா:
டி.ஆர்.எஸ்- 88, காங்கிரஸ்- 19, பா.ஜ.க- 1, மற்றவை- 11.
சத்தீஸ்கர்:
காங்கிரஸ்- 68, பா.ஜ.க- 15, மற்றவை- 7.
காங்கிரசின் இந்த அதிரடி வெற்றியால் இந்தியாவின் அரசியல் வரை படத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
மே 2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணிகட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் 21 ஆக இருந்தது. தற்போது அதில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்த படுதோல்வி முலம் தற்போது அருணாசல பிரதேசம், குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் என 6 மாநிலத்தில் மட்டும் பாரதீயஜனதா ஆட்சி நடைபெறுகிறது.
ஆனால் இந்த வெற்றியால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என 7 விரிவாகி உள்ளது
ஆனாலும் 6 மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் உதவியுடன் பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது. அவை விவரம் :
அசாம் (அசாம் கன பரிஷத், போடடோ லேண்ட் கட்சிகள் ஆதரவு),கோவா (கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டி ராவாடி கோமந்தக் கட்சிகள் ஆதரவு), ஜார்க்கண்ட் (அகில ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் ஆதரவுடன்), மராட்டியம் (சிவசேனா ஆதரவுடன்) மணிப்பூர் (நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் லோக் ஜனசக்தி ஆதரவுடன்) திரிபுரா (திரிபுரா மக்கள் முன்னணி)
பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் நடைபெற்ற வந்த 5 மாநிலங்களில் காஷ்மீரில் தற்போது கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆதனால் பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி செய்யும் மாநிலங்கள் 4 ஆக குறைந்து உள்ளது. அவைகள் பீகார் (ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு), நாகலாந்து (நாகா மக்கள் முன்னணிக்கு ஆதரவு) சிக்கிம் (சிக்கம் ஜன நாயக முன்னணிக்கு ஆதரவு) மேகலயா( தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு) ஆகும் ..
மற்றி மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் விவரம் : தமிழ்நாடு-(அ.தி.மு.க,) ஆந்திரா-(தெலுங்கு தேசம்) கேரளா-( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு) மேற்கு வங்காளம் -(திரிணாமுல் காங்கிரஸ்) ஒடிசா (பிஜூ ஜனதாதளம்) தெலுங்கானா- (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி)