சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு அட்டவணை மாற்றப்பட்டது. அதன்படி, புதிய அட்டவணையின்படி, தேர்வானது அக்டோபர் 4ம் தேதி நடத்தப்படுகிறது.
இந்நிலையில், முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை யுபிஎஸ்சி (UPSC) தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள், தேர்வில் பங்கேற்கும் நாள் வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், தேர்வாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அவ்வாறு மாஸ்க் அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சிறிய சானிடைசர் பாட்டிலை தேர்வின் போது உடன் எடுத்துச் செல்லலாம். தேர்வு அறைகள் மற்றும் வளாகங்களில் சமூக விலகல், தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க: செப்.15க்கு பிறகு இறுதி செமஸ்டர் தேர்வு; மாணவர்கள் நேரில் எழுத வேண்டும்: உயர் கல்வித்துறை