பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ்- நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கபடதாரி.
சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் கபடதாரி படத்தில் சிபிராஜுடன் இணைந்து நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில், லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்கும் இப்படத்தின் கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுதியிருக்கிறார். திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், தனஞ்செயனும் எழுதியுள்ளார்கள்.
கபடதாரி படம் ஜனவரி 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழுமம்.
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=lPLhnLqbzb8&feature=emb_title” width=”700″ autoplay=”yes” title=”சிபிராஜ் நடிப்பில் ‘கபடதாரி’ படத்தின் ட்ரைலர் வெளியீடு”]
இந்நிலையில் கபடதாரி படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ட்ராஃபிக் போலீஸாக இருக்கும் சிபி சத்யராஜ், நடந்த குற்றத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை. விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.