ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் புட்டலப்பட்டு பகுதியிலுள்ள ஹட்சன் பால் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென பால் பதப்படுத்தும் பிரிவில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 14 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் பெண்கள். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் நாராயண் பாரத் குப்தா கூறுகையில், இந்த விபத்து நிர்வாகத்தின் அலட்சியத்தின் விளைவாக இருந்ததா அல்லது தொழிலாளர்களின் அலட்சியத்தின் விளைவாக இருந்ததா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
கைத்தொழில் துறை பொது மேலாளர் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க: செப்டம்பர் முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க விரல் ரேகை பதிவு கட்டாயம்