பிரபல யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸ் நடத்திய 6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் வழங்கும் விழாவில், 2018ஆம் ஆண்டின் சிறந்த வில்லியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை ட்ரேட் செண்டரில் நேற்று நடைபெற்றது விழாவில் முதல் விருதாக சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்காக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், பெற்றார். சிறந்த இயக்குநர் விருது பரியேறும் பெருமாள் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூகப் பொறுப்புணர்வு கொண்ட இயக்குநர் விருதை முருகதாஸ் பெற்றார்.
மேலும் சிறந்த வில்லிக்கான விருது விருதைநடிகை வரலட்சுமிக்கு கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது, “சிறந்த வில்லியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தருணம் தனக்கு மிக முக்கியமானது. எனது அம்மா, அவர்கள் சீமந்தத்தின்போது அணிந்திருந்த சேலையைத்தான், இந்த நிகழ்வுக்கு நான் அணிந்து சென்றிருந்தேன். எனவே இந்த விருதை எனது தாய்க்கு சமர்பிக்கிறேன் . என்மேல் அன்பு காட்டிய அனைவருக்கும் எனது நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.
இதனயைடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வரலட்சுமியிடம், ‘ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும், ஒருவரைக் கொலை செய்ய வேண்டும், ஒருவரை திருமணம் செய்ய வேண்டும்’ என்றால் உங்கள் சாய்ஸ் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. கேள்விக்கு பதிலளித்த நடிகை வரலட்சுமி ‘சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலை கொலை செய்வேன் மற்றும் யாராவது ஒருவரை திருமணம் செய்வேன்’ என்று கூறினார்.