ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டு எரிப்பது மற்றும் அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமா்சிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக அ.தி.மு.க.வினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் அதிமுக. சாா்பில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், கடும் எதிர்ப்பை அடுத்து அரசின் நலத்திட்டங்கள், சா்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதாக படக்குழு தொிவித்தது. இதனைத் தொடா்ந்து படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு திரைக்கு வந்தது.
இந்த இந்த விவகாரத்தில் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யக் கூடும் என்பதால் இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ் முன்ஜாமீன் கோாி வழக்கு தொடா்ந்தாா்.
அதன்படி அவரை நவம்பா் 27ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடா்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழக அரசு சாா்பில், அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சித்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸிடம் விளக்கம் கேட்டுவிட்டு பதில் அளிப்பதாக அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்பு செய்திக்கு: சர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை கேக்காக வெட்டி கொண்டாடிய படக்குழு