சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
 
ஆனால் கோவில் நடை திறக்கப்பட்ட போதும் 12 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் வந்த நிலையில் அவர்களை அனுமதிக்கப்படக் கூடாது என்று பாஜக மற்றும் தீவிர ஹிந்துவா அமைப்புகள் கோவில் அருகில் போராட்டம் நடத்தினார்
 
போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றபோது காவல்துறையினருக்கும், போராட்டக்காரார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தடியடி நடைபெற்றது.
 
இதனால் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த வழக்கு ஜனவரி 22ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், முந்தைய தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.
 
இதனால் சுப்ரீம் கோர்ட்டுக்கு தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பா.ஜ.க. உட்பட இந்து அமைப்புகள் பலவும் போராட்டம் நடத்தின.
 
இந்நிலையில் கோவிலுக்குள் செல்ல எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், உரிய பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேரளா மாநில ஐகோர்ட்டில் 4 பெண்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனார்
 

 

கண்டிப்பான ஐபிஎஸ் அதிகாரி எஸ்பி யதிஷ்சந்திரா பாதுகாப்பு பணியில்

இதனைத் தொடர்ந்து கேரளா ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வரும் நிலையில், பெண்கள் மட்டும் கோவிலுக்குள் செல்ல 2 நாட்கள் தனியாக ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
 
சுமார் 116 ஆண்டுக்கு பின்னர் சுமார் 1000த்துக்கும் மேல கோவிலுக்குள் செல்ல அனுமதி கேட்டு காத்து இருந்த பெண்கள் தனி ஒதுக்கீடு செய்தி அறிந்து மகிழ்ச்சியில் உள்ளதாக கேரளா வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன 
 
மேலும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நிலக்கல்லில் தடுத்த எஸ்பி யதிஷ்சந்திரா கடந்த இரு தினங்களுக்கு முன்பே சபரிமலை பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியானது. ஆனால்  அவர் வரும் 30ம் தேதி வரை பணியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜக வினரை மேலும் அதிர்ச்சி அடையவத்துள்ளதாம் 
 
மேலும் சபரிமலையில் போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. இதனால் கோயில் வருமானமும் மிகவும் குறைந்துள்ளது. வழக்கமாக சபரிமலையில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினமும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
 
ஆனால் உண்டியல் பணம் குறைந்துள்ளதால் பணம் எண்ணும் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது..