சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் மற்றும் ரேவதி ஆகியோருக்கு உறுதுணையாக நிற்போம் என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ்- பென்னிக்ஸ்இருவரும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், திரையுலகினரும், பொது மக்களும் கண்டித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் தலைமைக் காவலர் ரேவதி துணிச்சலாக சாட்சி கூறியதற்காக அவருக்கு பலரும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பதிவில், “நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தீரமிகு ரேவதி, நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளீர்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக சமூக வலைதளத்திலிருந்து விலகி இருந்த இயக்குனர் வெற்றிமாறன், தற்போது சாத்தான்குளம் சம்பவத்துக்குக் கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: நீதிபதியை மிரட்டிய போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கிய முதல்வர் பழனிசாமி