சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி அளித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் போது ஆண், பெண் இருவரும் சமமானவர்கள் என்று தலைமை நீதிபதி தீபக் மீஸ்ரா கருத்து தெரிவித்தார்.

ஆனால் ஐந்து நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதியான நீதிபதி இந்து மல்ஹோத்ரா மத வழிபாட்டு உரிமைகளை நீதிமன்றம் முடிவு செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார். பக்தர்கள் தான் வழிபாட்டு முறைகளை முடிவு செய்ய வேண்டும், சம உரிமை அடிப்படையில் மத பழக்க வழக்கங்களை சோதிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனாலும் 4:1 என்ற கணக்கில் இந்த தீர்ப்பின் மூலம் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபட விதித்திருந்த தடை நீங்கியுள்ளது. கடவுளை வணங்குவதில் ஆண் – பெண் என்ற பாகுபாடு இருக்க கூடாது என்றும், பெண்களை கடவுகளாக வழிபடும் நாட்டில் சில கோயில்களில் தடை விதிப்பது சரியல்ல என்று நிதிபதிகள் தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை பொருத்த வரையில், 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதை மாற்றி அனைத்து பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘அனைத்து வயது பெண்களையும் கோயிலில் அனுமதிக்கலாம்’ என்று கேரள அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘இந்த நடைமுறை அடிப்படை உரிமைக்கு எதிரானது’ என்றனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடவுளை வணங்குவதில் ஆண் – பெண் என்ற பாகுபாடு இருக்க கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி அளித்து தீர்ப்பளித்தனர்.

சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பெண்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர். கேரளாவிலும் தமிழகத்தில் பல இடங்களில் பெண்கள் இனிப்புகள் வழங்கி தீர்ப்பை வரவேற்ற வருகின்றனர்.

மேலும் இது போலி ஆகம விதிகளை கொண்டாடி வந்த ஹிந்து மத பிற்போக்குவாதிகளுக்கு கிடைத்த சம்மட்டி அடி இது என்றும் சமூகவலை தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் ..