தள்ளுவண்டி கடை நடத்தும் தனது பெற்றோரை ஒருமையில் திட்டியதால் தட்டி கேட்ட பள்ளி மாணவனை காவல்துறையினர் தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டியில் சாப்பாடு கடை நடத்தி வருபவர் வேலுமயில். அவரது மனைவி இவருக்கு கடையில் உதவி புரிகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் இவரது மகனும் தள்ளுவண்டி வியாபாரத்துக்கு உதவி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு டிபன் கடையில் நின்று நிறைய பேர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். இரவு 8 மணிக்கு மேல் தள்ளுவண்டியில் கடை நடத்திய நிலையில், ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்லமணி கடையை உடனடியாக மூடும்படி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அவர்களின் செல்போனைப் பிடுங்கிக் கொண்டு உடனடியாகக் கடையை காலி பண்ண வேண்டும் என எச்சரித்துள்ளார். அதில் வேல்மணியும் அவரது மனைவியும், உதவி ஆய்வாளர் செல்லமணி ஒருமையில் பேசியுள்ளார்.

தனது பெற்றோரை ஒருமையில் காவல்துறையினர் பேசுவதைக் கண்டு ஆவேசமடைந்த பள்ளி மாணவன், உதவி ஆய்வாளர் செல்லமணியின் இருசக்கர வாகன சாவியைப் பிடுங்கிக் கொண்டதால், காவல் துறையினருக்கும் அந்த மாணவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=pIDSIqOB-_U” width=”700″ autoplay=”yes” title=”கோவை மாணவனை தாக்கிய காவல்துறை”]

இதனையடுத்து, காவல்துறையினர் மாணவனை லத்தியால் தாக்கினர். காவல்துறையினர் தங்களது மகனை தாக்குவதைக் கண்டு கலங்கிய பெற்றோர் காவல்துறையினரைத் தடுத்து, மகனைத் தாக்க வேண்டாம் எனக் கெஞ்சினர்.

பிறகு ரோந்து வண்டி வரவழைக்கப்பட்டு மாணவனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்துள்ளனர். தன் பெற்றோரை ஒருமையில் பேசியதே இந்நிகழ்விற்கு காரணம் என மாணவன் விளக்கமளித்துள்ளார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வாசிக்க: கொரோனா அதிகரிப்பால் நாளை முதல் முழு ஊரடங்கில் மதுரை..