ஏற்கனவே கொடநாடு கொலை, கொள்ளை பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஸ்டாலினுடன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரும் ஆளுநரை சந்தித்த விவரம் ஏற்கனவே அறிந்த்ததே.
மேலும் கொடநாடு கொலையை இயக்கியதே எடப்பாடி பழனிசாமி தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி, ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கையில் ஈடுப்படுவோம் எனவும் ஸ்டாலின் தெரிவித்த நிலையில்,
நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சயன் மற்றும் மனோஜை விடுவித்த தமிழக போலிசுக்கு மற்றொரு சிக்கல் வந்துள்ளது .
சயன் மற்றும் மனோஜை சட்ட விரோதமாக கைது செய்த தமிழக போலீஸ் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக மேத்யூ அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : கொடநாடு-தொடர்-மரண-வழக்கு நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத அதிமுக அரசு
சயன் மற்றும் மனோஜிடம் இருந்து தமிழக போலீஸ் 4 செல்போன்களை பறித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் சயனிடம் இருந்த ரூ.3,500-யும் போலீஸ் எடுத்துக்கொண்டதாக மேத்யூ குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை கூட்டி உள்ளது.