ஸ்விட்சார்லாந்தின் ஜெனீவாவில் 39-ஆவது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றறது. அதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுப்பப்படும் புகார் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்செல் பாச்லெட் கூறியதற்கு இந்தியா கவலை தெரிவித்தது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவரான மிச்செல் பாச்லெட், கடந்த திங்கள்கிழமை காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பேசிய போது “காஷ்மீர் குறித்து மனித உரிமைகள் அமைப்பின் சமீபகால அறிக்கையில் மனித உரிமைகள் தொடாரபாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனித உரிமை மீறல் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து வெளிப்படையான விவாதமும், தீவிரமான ஆலோசனைகளும் நடத்தப்பட வேண்டியுள்ளது. உலகில் மக்களுக்கு கிடைக்கும் நீதியும், மரியாதையும் காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அவர்களுக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று இந்திய அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும்
இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இரு புறமும் சென்று பாரவையிட அனுமதி கேட்கும் பணியும் தொடர்கிறது . நாங்கள் அந்தப் பகுதிகளை தொடா்ந்து கண்காணித்து அறிக்கை வெளியிடுவோம்’ என்று மிச்செல் பாச்லெட் தெரிவித்தார்”
அதில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ராஜீவ் சந்தர் பேசிய விவரம் ” கடுமையான சவால்களை இந்த அமைப்பு எதிர்கொண்டு வருகிறது. பயங்கரவாதம்தான் மனித உரிமைகளுக்கு எதிரான மிகப் பெரிய அத்துமீறலாக இருந்து வருகிறது.நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒற்றுமையையும் கருத்தில் கொண்டு மனித உரிமை மீறல் பிரச்னைகளை வெளிப்படையான முறைறயில் தீர்த்து வைக்க வேண்டும்.இனிவரும் காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில் அதிக கவனம் எடுத்துக் கொண்டு மிச்செல் பேசுவார் என்று நம்புகிறோம்” என்றார்
மிச்செலின் கருத்தை பாகிஸ்தான் தூதர் ஃபரூக் அமில் ஜெனீவாவில் வழிமொழிந்ததும் குறிப்பிடதக்கது.