சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள நிர்வாக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி இடங்கள்: 25

பதவி: Assistant Registrar – 01
தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்சம் 40 வயது

பதவி: Superintendents – 09
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்சம் 35 வயது

பதவி: Office Assistants – 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்சம் 35 வயது

பதவி: Assistant – 01
பதவி: Junior Assistant cum Computer Operators – 06
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கம்பியூட்டர் அப்பிளிக்கேஷன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்சம் 30 வயது

பதவி: Drivers – 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று முதல் உதவி சிகிச்சை சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்சம் 30 வயது

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.09.2018 @ 5 pm

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிள் பிரிவினருக்கு ரூ.250. The Registrar, Tamil Nadu Teachers Education University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்தலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Registrar i/c (by designation only), Tamil Nadu Teachers Education University, Chennai-600 097.

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ் நகல்கள், இரு பரிந்துரை கடிதங்கள், டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய…